HomeUncategorizedபிக்பாஸ் ரைசா வில்சன் நடிப்பில் ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள...

பிக்பாஸ் ரைசா வில்சன் நடிப்பில் ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள ‘நோவா’ ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தை தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்.’
இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.
கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ,  சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுவராஜ் சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.பிரேம்.பி படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை தேவேந்திரன் மேற்கொள்ள, ராம்போ விமல் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்.
இயக்குநர் மைலோ ‘நோவா’ படம் குறித்து பேசியபோது “ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரைசா வில்சன். அதுமட்டுமல்ல கன்னடம், மலையாளம், பெங்காலி என மொழிக்கு ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். பிரபல மலையாள வில்லன் நடிகரான சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவாளர் கே.வி குகனிடம் பணியாற்றிய கிறிஸ்டோ மற்றும் இசையமைப்பாளர் தமனிடம் பணியாற்றிய யுவராஜ் சந்திரன் இருவரும் இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்கள். படத்தொகுப்பாளர் பிரேம்.பி இதற்குமுன் டியர் ரவி படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான் நடைபெற்றுள்ளது. ‘நோவா’ படத்தைப் பார்த்துவிட்டு தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அதனால் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யும் விதமாக தெலுங்கு டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்றார்.

Latest articles

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது

தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து...

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு… ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=EOB0Ypf9DYY ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்! கதிர்,...

சூரி நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமா ‘மண்டாடி’ செப்டம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

சூரி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமா திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம்...

முழுக்க முழுக்க அசத்தல்… தெறிக்கவிடும் விஷால் இயக்கும் மகுடம் படத்தின் டீசர்!

https://www.youtube.com/watch?v=7lhZT4sT3SE   திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம்...

More like this