HomeCinemaஎன்னுடைய கனவு புராஜெக்ட் என்றால் அது தனுஷை வைத்து எடுக்கப்போகிற 'வட சென்னை 2' தான்!...

என்னுடைய கனவு புராஜெக்ட் என்றால் அது தனுஷை வைத்து எடுக்கப்போகிற ‘வட சென்னை 2’ தான்! -வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் டாக்டர் ஐசரி கே கணேஷ் 

Published on

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘ வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது.  தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் 140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் ஃபேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசையமைப்பாளர்  சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில்  நடிகர் தனுஷ் நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்  ஆகியோரும் பங்கேற்றனர்.
நடிகர் தனுஷ் விழாவில் பேசுகையில் “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.
எனக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு தொடர்பு உண்டு என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்.”
விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்  “ என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என தெரிவித்தார்.
டிஜே தீபிகா இசையால் விழாவிற்கு உற்சாகம் சேர்த்தார். இறுதியாக வானில் வெடித்த  வண்ணமயமான பட்டாசுகள் இரவை ஒளிரச் செய்து, விழாவிற்கு சிறப்பான நிறைவாக அமைந்தது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this