HomeCinema'உயிரே உயிரே'... நடிகர் கார்த்தி வெளியிட்ட 'மென்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘உயிரே உயிரே’… நடிகர் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Published on

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=qPaPA3AQ4JI
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் – வசீகர குரல் – இசை கோர்வை – என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் – ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- ‘மென்டல் மனதில்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this