HomeCinema‘டங்கி' படத்தின் ‘லுட் புட் கயா' பாடலில் காதல் மேஜிக்குடன் துள்ளலாட்டம் போடும் ஷாருக்கான்!

‘டங்கி’ படத்தின் ‘லுட் புட் கயா’ பாடலில் காதல் மேஜிக்குடன் துள்ளலாட்டம் போடும் ஷாருக்கான்!

Published on

ஷாருக்கான் நடிக்க, ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள படம் ‘டங்கி.’

வரும் டிசம்பர் 21; 2023 அன்று உலகம் முழுக்க வெளியாகவுள்ள இந்த படத்தின் இசைப்பயணத்தை ‘லுட் புட் கயா’ என்ற முதல் பாடலை வெளியிட்டு துவங்கியிருக்கிறது படக்குழு.

படத்தின் கதைப்படி கதைநாயகி ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப் பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.

புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அழகான நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப் பாடல்.

அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் இதம் தரும் இசையில், அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கும் இந்தப் பாடலில் ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளிக்கலாம்.

இந்த படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கவிருக்கிறார்.

Latest articles

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்!

தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

More like this