HomeCinemaமலைக்கிராமத்தில் பாலியல் வன்முறை வெறியாட்டம்; காரணம் யார்? பரபரப்பு கூட்டும் உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான...

மலைக்கிராமத்தில் பாலியல் வன்முறை வெறியாட்டம்; காரணம் யார்? பரபரப்பு கூட்டும் உண்மைச் சம்பவ பின்னணியில் உருவான ‘தி ஐ -3’ ரிலீஸுக்கு தயார்!

Published on

குரு பிரகாஷ் இயக்கத்தில் ‘ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ்’ கொடைக்கானல் ஆர்.ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘தி ஐ -3.’

ரோஷன் – சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ், மாலி, சுஜி, ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர். அது என்ன வழி? கொலையாளிகள் யார்? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுவதே படத்தின் திரைக்கதை.

படப்பிடிப்பு தேனி மாவட்டம் மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களாக இடைவிடாது நடைபெற்று முடிவடைந்தது. இதுவரை யாரும் சென்றிடாத இடமான தேனி மாவட்டத்திலுள்ள மேகமலையில் முழு நீள சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

‘பாபிலோனா தொடாத பருவத்தோட்டம்’ எனும் துள்ளலிசைப் பாடல், ‘உனக்குள் நான் தொலைந்து போனேன்’ எனும் மென்மையான காதல் பாடல் உட்பட படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இடம் பெற்றுள்ளது.

பட வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:-

கதை  திரைக்கதை இயக்கம் – குரு பிரகாஷ்
இணைத்தயாரிப்பு – செல்வ சத்யா, ரஞ்சிதா
வசனம் -முத்துக்குமார்
ஒளிப்பதிவு – ராஜேஷ் குமார்
இசை -ஜீவா வர்ஷினி
பாடல்கள் -காதல் மதி
எடிட்டிங் – சி.எஸ் பிரேம்குமார்
நடனம் – விமல்
சண்டைப்பயிற்சி – ரவி ராஜ்
மக்கள் தொடர்பு -வெங்கட்

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this