HomeCinemaராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டீசர் வெளியானது! 

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் வெளியானது! 

Published on

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’.  கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=IOADonyCAcc
ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி ‘ராயா அறிமுகம்’ வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது.
டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசிய பின்னணிக்கு நகரும் இந்தக் கதை, இருண்ட, பரபரப்பான சூழலுடன் வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கியது. அதிரடி காட்சிகளுக்கு அப்பால், கதையமைப்பு மற்றும் நடிகர்களின் ஆழமான நடிப்பே இந்த உலகத்தின் இதயத் துடிப்பாக இருப்பதையும் டீசர் சுட்டிக்காட்டுகிறது.
இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். அவரது இந்த மாற்றம் முழுமையான புதிய  அவதாரம் என்றே சொல்லலாம். ஒல்லியான, பரவசமான தோற்றத்திலிருந்து, போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, அவரின் ஒவ்வொரு லுக்கும் அவரது கடுமையான பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால் இது வெறும் உடல் மாற்றம் மட்டுமல்ல. ஒவ்வொரு தோற்றத்திலும் யாஷ் காட்டும் உடல் மொழியும் நுணுக்கமான நடிப்புத் திறனும், அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை முன்வைக்கின்றன. இதுவரை டாக்ஸிக் பயணத்தில் காணாத ஒரு தைரியமான புதிய அத்தியாயத்தை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.
டீசர் குறித்து  தயாரிப்பாளர்களின் விளக்கம் ஒரு வரியில் முடிகிறது :“It’s gonna get crazyyyy.”
திரையில் காணப்படும் வேகத்தையும், அதிரடியையும் பார்த்தால், மார்ச் 19, 2026 அன்று டாக்ஸிக் உலகம் அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
இந்த டீசர் தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகிறது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this