HomeCinemaவெற்றிமாறனின் விசாரணை வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு... உற்சாகமாக கொண்டாடிய படக்குழு!

வெற்றிமாறனின் விசாரணை வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு… உற்சாகமாக கொண்டாடிய படக்குழு!

Published on

தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி,  கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்
Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் M சந்திரகுமார் அவர்களின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை” திரைப்படம்,  போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், அதிகாரத்தின் கொடூர முகம், அடித்தட்டு மக்களின் வலி – இவை அனைத்தையும் மிக நேர்மையாகவும், தைரியமாகவும் திரையில் பதிவு செய்தது. எந்த பெரிய வணிக சமரசங்களும் இல்லாமல், உண்மையை அப்படியே சொல்லும் சினிமாவாக இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்றது.
வெற்றிமாறனின் இயக்கத்தில், இயல்பான நடிப்பு, ஆவணப்படத் தன்மையிலான  காட்சியமைப்பு, மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை ஒரு சாதாரண திரைப்படத்தையும் தாண்டிய, ஒரு சமூக ஆவணமாக மாற்றின. தேசிய, சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் பெற்ற அங்கீகாரம், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களில் ஒன்றாக அமைந்தது.
‘விசாரணை’ போன்று துணிச்சலான, சமூக பொறுப்புள்ள படங்கள் தொடர்ந்து உருவாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்த வகையில், 10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் உயிருடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாகவே திகழ்கிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this