HomeCinema'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும்...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

Published on

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் வெளியீடு – மூன்று வார விழா கொண்டாட்ட அலைக்குள் அழைத்துச் செல்கிறது. முதல் வாரம் ஓணம் மற்றும் மிலாத் உன் நபி. அதைத்தொடர்ந்து இரண்டாவது வார இறுதியில் ரக்ஷா பந்தனும், மூன்றாவது வாரத்தில் ஜன்மாஷ்டமியும் என விழா காலங்கள் என்பதாலும்.. வாரத்தின் நடுப் பகுதியிலும் வலுவான உற்சாகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிலான அதிக பட்ஜெட் படத்திற்காக இந்த நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலம் என்பது..பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்ப்பை விட அதிகமான வசூலை அளிக்கும். சரியான திட்டமிடல் மற்றும் சரியான தருணங்களுக்கு பெயர் பெற்ற நானி இத்தகைய நடவடிக்கையின் மூலம் தனது சந்தை புத்திசாலித்தனத்தை மீண்டும் நிரூபிக்கிறார்.

இதற்கிடையே படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றான நானியின் அட்டகாசமான அறிமுக பாடலை படக் குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின் பங்களிப்புடன் ஒரு பிரம்மாண்டமான அரங்கில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் நானியின் துடிப்பான – உற்சாகமான பாணியுடன் பொருந்தக்கூடிய ஒரு மாஸான பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பெருங்கூட்டத்தினரை மகிழ்விக்கும் வகையில் நடன இயக்குநர் சுதன் மாஸ்டர் பெரிய அளவில் துடிப்பான நடன அசைவுகளுடன் வடிவமைத்து வருகிறார்.

‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில், பரபரப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நானியின் கடுமையான ஜெடலுவை காண்பிக்கும் புதிய வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

சி.சாய் ஒளிப்பதிவை கவனிக்கிறார். நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this