HomeCinemaஅனுராக் காஷ்யப் இயக்கத்தில் மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை ZEE5 வெளியிட்டது!

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை ZEE5 வெளியிட்டது!

Published on

மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் விதமாக அனுராக் காஷ்யப் இயக்கிய  ‘கென்னடி’ பட டிரெய்லரை ZEE5 வெளியிட்டது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த இந்த படம், வரும் பிப்ரவரி 20 அன்று ZEE5 தளத்தில் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர்  ஆகிறது.

https://www.youtube.com/watch?v=ZNZuX5zSHYw
‘கென்னடி’  மும்பையை மையமாகக் கொண்டு,  நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின்  மையம்.
படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.
கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய  கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம்  இவை அனைத்தும் இணைந்து,  தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.
படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது “‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை   உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”
நடிகர் ராகுல் பட் கூறியதாவது “கென்னடி பாத்திரத்தில்  நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும்  நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”
சன்னி லியோன் கூறியதாவது “‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this