HomeCinemaமோகன்லால் நடிக்கும் L367 திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது! 

மோகன்லால் நடிக்கும் L367 திரைப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது! 

Published on

மோகன்லால் நடிப்பில் தற்காலிகமாக L367 என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை கோகுலம் கோபாலனின் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனது முதல் படமான ‘மெப்படியான் ‘ படத்தின் மூலம் தேசிய விருதை வென்ற இயக்குநர் விஷ்ணு மோகன் இப்படத்திற்கு கதை எழுதி, இயக்குகிறார்.

மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பாலிவுட் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக் குழுவினர் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் தெரியவரும்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் – ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் வரலாற்றின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக அமையவிருக்கிறது. பைஜு கோபாலன் மற்றும் வி.சி.பிரவீன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் – சுரேஷ் கோபியின் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயராம் -‌ காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஆசைகள் ஆயிரம் ‘, ஜெயசூர்யாவின் ‘கதனார்’, நிவின் பாலி- பி.உன்னிகிருஷ்ணன் இணையும் ஒரு படம் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர் ‘ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் #L367 படமும் இணைவதன் மூலம் மலையாள திரையுலகில் ஒரு சக்தி வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தன்னுடைய பணியையும், பங்களிப்பையும்  வலுப்படுத்திக் கொள்கிறது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this