HomeCinemaஇந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்! 'பராசக்தி’ பட வில்லன் நடிகர் ரவி மோகன் பெருமிதம்

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்! ‘பராசக்தி’ பட வில்லன் நடிகர் ரவி மோகன் பெருமிதம்

Published on

வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கரா மேடம் தான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.

அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.

சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (overshadowed) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்” என்றார்.

”குறுகிய காலத்திலேயே நூறு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் அவரது அற்புதமான இசையை நிச்சயம் விரும்புவீர்கள்”.

”’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் ‘பராசக்தி’ உங்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ’பராசக்தி’ திரைப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

Latest articles

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் அண்டர் – 18 படம் பூஜையுடன் துவங்கியது!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்...

More like this