HomeCinemaஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு...

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!

Published on

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ளது.

படம் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு முழுமையான ‘ஃபீல்-குட்’ பொழுதுபோக்கு படமாக ‘ஹேப்பி ராஜ்’ உருவாக்கப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், நம்பிக்கை, மென்மையான உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய தருணங்களை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் ‘ஹேப்பி ராஜ்’ கதாபாத்திரத்தில் இளமை, புத்துணர்ச்சி மற்றும் அழகாக திரைநடையை வழங்கியுள்ளார். கதையின் உணர்ச்சி ஆழத்துக்கும் சூட்டிற்கும் ஏற்ப ஸ்ரீ கௌரி பிரியா தனது நடிப்பால் வலு சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பவும் என்ட்ரி கொடுக்கும் எவர்கிரீன் நடிகர் அப்பாஸ் இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பதுடன், அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் இணைந்து, படத்தின் உயிரோட்டமான கதைக்களத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ப்ரோமோவுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

மரியா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் ஆர்.கே. செல்வா, கலை இயக்குநர் குமார் கங்கப்பா, ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ரேகா கவனித்து வருகிறார்.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this