HomeCinema'இசைஞானி' இளையராஜா இசையில் ' அரிசி' படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் - அறிவு கூட்டணி!

‘இசைஞானி’ இளையராஜா இசையில் ‘ அரிசி’ படத்திற்காக இணைந்த பாடகர்கள் வேடன் – அறிவு கூட்டணி!

Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா இசையில் முன்னணி பாடகர்களான அறிவு மற்றும் வேடன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் எஸ் ஏ விஜயகுமார் இயக்யுள்ள இந்த படத்தில் சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்திருக்கும் தருணத்தில், விவசாயத்தை பற்றிய பாடல் ஒன்றை இசைஞானி இளையராஜா உருவாக்கி இருக்கிறார். அந்தப் பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத, பிரபல பாடகரான வேடன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டக்கரமான வாழ்வை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வெளியான பிறகு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் என்றும் பிப்ரவரி மாதத்தில் படத்தின் வெளியீடு இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவப்பு சிந்தனையின் அரசியல் பிம்பமான இரா. முத்தரசன்- சமுத்திர கனி – வேடன் – அறிவு- ஆகியோர் ‘இசைஞானி’ இளையராஜாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால்.. இந்த பாடலுக்கு இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

விவசாயத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி சண்முகம் – எஸ் எம் பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Latest articles

மனதுக்கு இதம் தரும் ‘வானே வானே…’ துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

More like this