HomeCinemaவிக்ராந்த் நடித்துள்ள 'LBW- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் ஜனவரி 1 முதல் ஜியோஹாட்ஸ்டாரில்...

விக்ராந்த் நடித்துள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணையத் தொடர் ஜனவரி 1 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

Published on

விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகும் இணையத்தொடர் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LWB- லவ் பியாண்ட் விக்கெட்.’ இந்த தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட்பீட்’ (சீசன் 1 & 2), ‘உப்பு புளி காரம்’, ‘ஆஃபிஸ்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ ஆகிய நூற்றுக்கும் அதிகமான லாங் ரன் எபிசோட் கொண்ட இணையத்தொடர்கள் ஹாட்ஸ்டாரில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அதே பாணியில் ஆழமான கதை சொல்லலுடன் ரசிகர்களை கட்டிப்போட வருகிறது ‘LBW.’

சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ கதைப்படி ஒரு காலத்தில் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரனாக இருந்த ரங்கனின் கரியரில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகிறது. இப்போது பயிற்சியாளராக இருக்கும் ரங்கன், போராடும் கிரிக்கெட் அகாடமியில் ஒரு பின்தங்கிய அணியைப் பயிற்றுவித்து அதன் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். கிரிக்கெட்டின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தத் தொடரில் விளையாட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் லட்சியத்தோடு இரண்டாவது வாய்ப்புக்காகப் போராடுவதன் உண்மையான அர்த்தத்தை களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் படம்பிடித்து காட்ட இருக்கிறது இந்தத் தொடர்.

அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிகரமான ‘ஹார்ட்பீட்’ இணையத்தொடரை தயாரித்த அட்லீஃபேக்டரி ‘LBW’ தொடரையும் தயாரித்துள்ளது. வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும்!

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this