HomeCinemaஇயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது! 'கூரன்' திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது.

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது! ‘கூரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது.

Published on

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு ‘கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அது பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில்
நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப்
படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.

‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக
‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது.

கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள். நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்றார் மகிழ்ச்சியோடு.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this