HomeCinemaரொமான்டிக் காமெடி சப்ஜெக்டில், காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்களை சுவாரஸ்யமாக்கியுள்ள 'டியர் ரதி' ஜனவரி...

ரொமான்டிக் காமெடி சப்ஜெக்டில், காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டங்களை சுவாரஸ்யமாக்கியுள்ள ‘டியர் ரதி’ ஜனவரி 2-ம் தேதி ரிலீஸ்!

Published on

ரொமான்டிக் காமெடி வகை படமாக உருவாகியுள்ள ‘டியர் ரதி’ திரைப்படம் வரும் ஜனவரி 2-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

‘பிக் பாஸ்’ சரவண விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் இது. ‘இறுதிப் பக்கம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை அவரிடம் கேட்டபோது, “இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து ‘டேட்டிங்’கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான். அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள். வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அது என்ன மாதிரியான பிரச்சினை? அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் படத்தின் கதை.

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன? அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் ‘ரொமான்டிக் காமெடி’யாக இந்த படம் உருவாகியிருக்கிறது” என்றார்.

படத்தின் நாயகன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது.

நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த ‘மீஷா’ படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன், நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜோன்ஸ் ரூபர்ட் ‘பொறியாளன்’, ‘சட்டம் என் கையில்’ படங்களுக்கு இசையமைத்தவர்.

ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோகேஷ் இளங்கோவன். இவர் ‘நாய்சேகர்’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளர். ‘ஹர்ஹரா’ படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர்.

பிரேம் பி  படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் செல்வா ஆர்கே.யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப், நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் ஹென்றி குமார்.

இப்படி புதுமுகங்களையும் அனுபவிசாலிகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறது இந்த படம்.

Latest articles

இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2.’

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது...

என்னுடைய நடிப்பை தயாரிப்பு தரப்பு சிறப்பு என பாராட்டியிருக்கிறார்கள்! -சிக்மா பட விழாவில் நடிகர் சந்தீப் கிஷன் உற்சாகம்

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க, வந்தை பிரேம் இயக்கும் ‘மறுஜென்ம காதல்’ படம் பூஜையுடன் துவக்கம்!  

வந்தை பிரேம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் 'மறுஜென்ம காதல்' திரைப்படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க...

பீப் சினிமா விமர்சனம்

புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் 'பீப்.' ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து...

More like this