HomeCinemaநடிகர் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின்...

நடிகர் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி டி செல்வகுமார்! 

Published on

திரைப்படங்களில் திறமையான காமெடி நடிகராக, டிவி நிகழ்ச்சிகளில் கலகலப்பான ஜட்ஜாக வலம் வருபவர் தாடி பாலாஜி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். அவர் தற்போது குடல் சார்ந்த பிரச்சனைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு உதவும் விதமாக, சேவை மனப்பான்மை கொண்ட கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி டி செல்வகுமார் ரூ 1 லட்சம் வழங்கினார்.

அதற்கான நிகழ்வில் பேசிய பி டி செல்வகுமார் ”இந்த உதவியை விளம்பரத்துக்காக செய்யவில்லை; தாடி பாலாஜியை அவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு தெரியும். அவர் தளபதி விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பை ஆரம்பகாலத்தில் பெற்றுக் கொடுத்ததில் இருந்து அவருடன் நட்பு தொடர்கிறது. அவருக்கு இப்போது மருத்துவ சிகிச்சைக்கான உதவி தேவைப்படும் சூழ்நிலை. நான் இந்த நேரத்தில் அவருக்கு உதவுவதன் மூலம் அவரது நிலைமை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். இதை பார்த்து விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் பலரும் அவருக்கு உதவ முன்வர வேண்டும். நான் பாலாஜிக்கு செய்தது உதவியல்ல; ஒரு நல்ல கலைஞனுக்கு என்னால் முடிந்த தொண்டு” என்றார்.

உதவியை பெற்றுக்கொண்ட தாடி பாலாஜி, ”30 வருடங்களுக்கு முன் நான் நடிக்க வந்தபோது விஜய் சார் படத்துல வாய்ப்பு பெற்றுக் கொடுத்தவர் பி டி செல்வகுமார். அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எவ்வளவோ உதவிகள் செய்து வருகிறார். அவர் அரசுப்பள்ளிகளுக்காக கட்டடம் கட்டிக் கொடுத்தபோது அந்த திறப்புவிழா நிகழ்ச்சிக்கும் நான் போய் வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு பி டி செல்வகுமாருடனான தொடர்பு பற்றி எடுத்துச் சொல்லி நன்றி தெரிவித்தார்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this