HomeCinemaடாக்டர் அருளானந்து பிறந்தநாளில் 'விஷன் சினிமா ஹவுஸ்' வெளியிட்ட 'ஹைக்கூ' படத்தின் கலக்கல் போஸ்டர்!

டாக்டர் அருளானந்து பிறந்தநாளில் ‘விஷன் சினிமா ஹவுஸ்’ வெளியிட்ட ‘ஹைக்கூ’ படத்தின் கலக்கல் போஸ்டர்!

Published on

‘விஷன் சினிமா ஹவுஸ்’ டாக்டர் அருளானந்து – மேத்யூ அருளானந்து தலைமையில் செயல்படுகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படத்தின் பெயர் ‘ஹைக்கூ.’
டிசம்பர் 5, 2025 இன்று தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்துவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படும் ’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
படத்தின் கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் தெலுங்குத் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நடிகை ஸ்ரீ தேவி அப்பல்லா மற்றும் மோலிவுட்டின் சென்சேஷனல் நடிகை ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டர், இளவயது காதல் மற்றும் மாணவர்களின் நம்பிக்கையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. யாரும் இல்லாத கேலரியில் வண்ணமயமான நாற்காலிகளில் படத்தின் காதல் ஜோடி அமர்ந்திருக்க அவர்களின் கெமிஸ்ட்ரியை தெரிவிக்கும் வகையில், மேலே இருக்கும் ஹார்ட்டின் ’ஹைக்கூ’ படத்தின் ஃபீல் குட் கதைக்கருவை அழகாக பிரதிபலிக்கிறது.
இளமை துடிப்புடன் கூடிய கதைகளை திரையில் கொண்டு வருவதற்கு பெயர் பெற்ற யுவராஜ் சின்னசாமி ’ஹைக்கூ’ திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து ஹரிஹரன் ராம் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் அதிர்ச்சி அருண் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் புல்கான் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் மெல்லிசை அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும்.
‘ஜோ’ மற்றும் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு விஷன் சினிமா ஹவுஸ் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கதைகள் கேட்டு வருகிறது. முதல் காதல், நட்பு மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டாடும் படமாக ‘ஹைக்கூ’ வர இருக்கிறது.
’ஹைக்கூ’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு புதிய திறமையாளர்கள் மற்றும் இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் விஷன் சினிமா ஹவுஸின் தயாரிப்பாளர் டாக்டர். அருளானந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை படக்குழு தெரிவித்துள்ளது. டீசர், கிளிம்ப்ஸ் மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும்.
இந்த படத்திற்கு ஏகன் அருளானந்து எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன் இணைத் தயாரிப்பாளராகவும் உள்ளார்கள்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this