HomeCinemaஇது டார்க் காமெடி படம்; எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்! -ரிவால்வர் ரீட்டா படத்தின் முன் வெளியீட்டு...

இது டார்க் காமெடி படம்; எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்! -ரிவால்வர் ரீட்டா படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் 

Published on

-ரிவால்வர் ரீட்டா படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று வெளியாகவுள்ளது. அதையொட்டி படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் ஜெ கே சந்துரு கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி.

கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும்.

The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார்.

எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள்.

இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ”இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி.

ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள்.

என்னுடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும்.

ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள்” என்றார்.

சென்னை 28, மாநாடு, பார்ட்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு.

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this