HomeMovie Reviewயெல்லோ சினிமா விமர்சனம்

யெல்லோ சினிமா விமர்சனம்

Published on

பயணங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியளிக்கும்; கவலைகளிலிருந்து மீண்டு வர உதவும்; வாழ்க்கையின் மாற்றங்களுக்கு துவக்கமாக அமையும்.

இந்த படத்தின் நாயகிக்கு தந்தையின் உடல்நிலை சார்ந்த கவலை, காதல் தோல்வி என சிலபல பிரச்சனைகள். அதிலிருந்தெல்லாம் தற்காலிகமாக விடுபட நினைத்து கேரளா வரை சென்று தோழியை சந்தித்து நேரம் செலவிட்டு ஊருக்கு திரும்ப திட்டமிடுகிறாள். திட்டமிட்டபடி செல்கிறாள்; தோழியைச் சந்திக்கிறாள். அங்கிருந்து வேறொரு இடத்துக்கு பயணப்பட, ஒரு இளைஞனை சந்தித்து நட்பாகிறாள். அவனும் காதலில் தோல்வியடைந்தவன் என்பது இன்ட்ரஸ்டிங் மேட்டர்.

அந்த இளைஞனுக்கும் அவனுக்குமான நட்பு நட்பாகவே நீடித்ததா, காதல் கல்யாணம் என அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்ததா? பயணத்தின் மூலம் அவள் மனதுக்கு போதுமான ஆறுதலும் புத்துணர்ச்சியும் கிடைத்ததா?

அத்தனை கேள்விகளுக்கும் இயக்குநர் ஹரி மகாதேவன் அமைத்திருக்கும் திரைக்கதையில் பதில் இருக்கிறது.

கதை தன்னை மையப்படுத்தி சுழல்வதை புரிந்துகொண்டு, கவலை நிரம்பிய மனதையும் அதே மனதில் உற்சாகம் அப்பிக் கொண்ட உணர்வையும் சரியானபடி பிரதிபலித்து அப்ளாஸ் பெறுகிறார் பூர்ணிமா ரவி.

பூர்ணிமாவின் பயணத்தில் துணை சேர்கிற நபராக, அவள் தோள் ‘சாய்’ந்து சுகதுக்கம் பகிரும் அளவுக்கான நண்பனாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தமான கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் துடுக்குத் தனமாகவும் போகப்போக உணர்வுபூர்வமாகவும் நடித்து கவனம் பெறுகிறார் வைபவ் முருகேசன்.

‘இந்த லைஃப் என்ஜாய் பண்றத்துக்காகத்தான்’ என்ற மனநிலையில் வாழ்பவராக நமீதா கிருஷ்ண மூர்த்தி கதாநாயகியின் தோழியாக துறுதுறுவென சுற்றிக் கொண்டிருக்க, பூர்ணிமாவின் தந்தையாக டெல்லி கணேஷ் குறைந்த காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கும் அனுபவ நடிப்பு நிறைவு.

லீலா சாம்ஸன் உள்ளிட்ட மற்றவர்கள் அப்படியும் இப்படியும் வந்துபோகிறார்கள்.

ஆனந்த் காஷிநாத்தின் பின்னணி இசை ‘ஃபீல் குட்’ படத்துக்கேற்ற தன்மையோடு இணைந்திருந்தாலும் ஒருசில காட்சிகளில் அளவுக்கதிக அதிரடியாக இருப்பது எரிச்சலூட்டுகிறது.

கேரளாவில் துவங்கி கதைநாயகி பயணப்படும் வழியெங்கும் தென்படுகிற பசுமை, மலை, அருவி என அனைத்தும் அபி அத்விக்கின் ஒளிப்பதிவில் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றன.

பழைய நண்பர்களையும் தன்னை வளர்த்த பாட்டியையும் சந்திக்க வேண்டும் என்பதற்காக புறப்படும் பெண்ணுக்கு பயணத்தின் முடிவில் கிடைக்கிற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்க்கிறபோது, ஆடியன்ஸுக்கும் பயணங்களின் மீது ஆர்வம் உருவாகலாம்!

Rating 3 / 5

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this