HomeCinemaஃபர்ஸ்ட் லுக்கில் பரபரப்பைக் கிளப்பிய 'சாவு வீடு' ரிலீஸுக்கு தயார்!

ஃபர்ஸ்ட் லுக்கில் பரபரப்பைக் கிளப்பிய ‘சாவு வீடு’ ரிலீஸுக்கு தயார்!

Published on

கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘சாவு வீடு’ புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.

படத்தில் பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் சாவு புகைப்படங்கள் நிறைந்திருக்கும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.

படம் பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித்திடம் கேட்டபோது, ”ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன். கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படம் இந்த நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this