HomeCinemaபிரபு சாலமனின் 'கும்கி 2' படத்திலிருந்து 'பொத்தி பொத்தி உன்ன வச்சு' பாடல் வெளியானது!

பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்திலிருந்து ‘பொத்தி பொத்தி உன்ன வச்சு’ பாடல் வெளியானது!

Published on

பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கும்கி 2’ படத்திலிருந்து, ‘பொத்தி பொத்தி உன்ன வச்சு’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில் அமைந்துள்ள அந்த பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘கும்கி’ 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.

படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் இந்த படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் உருவாகியுள்ளது; விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this