HomeCinemaதீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக ஒளிர்ந்த இந்தியா!

தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்காக ஒளிர்ந்த இந்தியா!

Published on

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பண்டோரா உலகம் அதிகாரப்பூர்வமாக இந்திய திரையரங்குகளில் நுழைந்ததை அடுத்து, இந்த தீபாவளி இன்னும் கொண்டாட்டமாக மாறியது.

இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் பண்டிகை கால கொண்டாட்டத்தை எதிரொலிக்கும் ‘அவதார்’ திரைப்படம் நீண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயங்களில் தனியிடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து, அடுத்த பாகமும் நிச்சயம் வெற்றி அடையும்.

இந்த பண்டிகைக் காலத்தில் பண்டோராவின் வருகையைக் கொண்டாடும் வகையில், அவதாரை குறிக்கும் ‘A’ என்ற எழுத்து வடிவில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றியும் பண்டோராவின் துடிப்பான உலகத்தைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்களுடனும் ரசிகர்கள் கொண்டாடினர். கதைசொல்லல் மற்றும் இந்தியர்களின் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக இணைக்கும் வகையில் ‘அவதார்’ ரசிகர்களுடன் கலந்திருப்பதை இது குறிக்கிறது.

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட சினிமா அனுபவத்தைக் காண தயாராகுங்கள்! பார்வையாளர்களை பண்டோராவின் சொல்லப்படாத பகுதிகளுக்குள் அழைத்துச் செல்ல இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்.

டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை 20த் சென்சுரி ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this