HomeCinemaமோகன்லால் நடிக்கும் ‘லூசிபர்' இரண்டாம் பாகம் ‘எம்புரான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மோகன்லால் நடிக்கும் ‘லூசிபர்’ இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற, இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டில், மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க, மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லாலின் அதிரடியான தோற்றம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மிகப்பெரிய பொருட்செலவில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் இணைந்து இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் வெளியாகும்.

Latest articles

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

அங்கீகாரம் திரைப்படம் ஒரு பார்வை

'அங்கீகாரம்' திரைப்படம் சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை மிக எதார்த்தமாகப் பேசுகிறது. துப்புரவுத் தொழிலாளியாக வரும் தாய் மற்றும்...

உற்சாகமாய் நடந்த, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி நடிக்கும்  ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’  படத்தின் துவக்க விழா!

யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த் நடிப்பில், கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ்...

கிராமத்து மக்கள் வெளியிட்ட ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வை!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக...

More like this