HomeCinemaஇயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியவர் இயக்கும் ‘ஜிகிரி தோஸ்த்.' விரைவில் டிரெய்லர் ரிலீஸ்.

இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியவர் இயக்கும் ‘ஜிகிரி தோஸ்த்.’ விரைவில் டிரெய்லர் ரிலீஸ்.

Published on

இயக்குநர் ஷங்கரிடம் ‘2.0’ படத்தில் பணியாற்றியவரும், ‘திறந்த புத்தகம்’, ‘கால் நூற்றாண்டுக் காதல்’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து, நடித்து, எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்.’

ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன், பாடகர் சிவம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ‘‘விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது. விக்கியின் பிறந்த நாளையொட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள்.

லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும்” என்றார்.

இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன். ‘‘படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும்” என்றார்.

ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைத்தவருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். அவர், ‘‘காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசையமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது” என்றார்.

இந்தப் படத்துக்கு ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘பந்தன்’, ‘சத்திய சோதனை’, ‘விழித்திரு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் டீசரும், டிரெய்லரும் விரைவில் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி தெரியவரும்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this