HomeCinema'டார்லிங் - 2', 'விதிமதி உல்டா' பட நாயகன் ரமீஸ் ராஜாவின் ரீ எண்ட்ரி... ஹாரர்...

‘டார்லிங் – 2’, ‘விதிமதி உல்டா’ பட நாயகன் ரமீஸ் ராஜாவின் ரீ எண்ட்ரி… ஹாரர் திரில்லர் படம் தயாரித்து நடிக்கும் பணிகள் தீவிரம்!

Published on

ரமீஸ் ராஜா டார்லிங் – 2 ஹாரர் காமெடி படத்தையும், விதிமதி உல்டா திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். அவர் ஏழு ஆண்டுகள் கழித்து தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

அது பற்றி பேசிய ரமீஸ் ராஜா ”இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும் ஹாரர் படமாக உருவாக்க அதற்கான கதை டிஷ்கஷன் நடந்துக் கொண்டிருக்கிறது நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் புதுவிதமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறேன். மிகுந்த பொருட்செலவில் வித்தியாசமான கதையமைப்போடு அனைவரையும் கவரும் விதத்தில் நானே தயாரிக்கிறேன்

டார்லிங் – 2, விதிமதி உல்டா போன்ற படங்களுக்கு உங்களது ஆதரவை அளித்ததைப்போல் தொடர்ந்து இப்போது தயாராகி வரும் புதிய படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ரமீஸ் ராஜாவுடன் டார்லிங் – 2, விதிமதி உல்டா என இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன், காளி வெங்கட், கருணாகரன், சென்றாயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் – 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது.

விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு இடமளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார். தொடங்கிய SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்பால்டிக்ரஃபிங் உற்பத்தியில் தனித்துவமான மோனோபோலி நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPECIALISED ROOFINGS PVTLTD நிறுவனத்தை பிரபலமான நிறுவனமாக நிலைநிறுத்திய பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பிவருகிறார் ரமீஸ் ராஜா.

Latest articles

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்திலிருந்து ‘வானே வானே’ இதமான காதல் பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின்...

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு....

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

More like this