HomeCinemaபிக் பாஸ் விக்ரமன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

பிக் பாஸ் விக்ரமன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

Published on

ரொமாண்டிக் காமெடி ஜானர் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்தமானது. அதை மனதில் வைத்து அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது.

இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சுப்ரிதா நடிக்கிறார். ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் பகிர்ந்து கொண்டதாவது, “எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார்” என்றார்.

படத்தின் கதை குறித்து கேட்டபோது, “இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதே சமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது” என்றார்.

படப்பிடிப்பு செப்டம்பர் 10-ம் தேதியில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கிறது. ஒரே ஷெட்யூலாக முடிய இருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை கொடுக்கவிருக்கிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this