HomeCinemaஆக்ஷன் அனுபவத்தை தத்ரூபமான வழங்கப்போகும் 'சிசு: ரோட் டு ரிவெஞ்ச்' படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது! 

ஆக்ஷன் அனுபவத்தை தத்ரூபமான வழங்கப்போகும் ‘சிசு: ரோட் டு ரிவெஞ்ச்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது! 

Published on

ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘சிசு: ரோட் டு ரிவெஞ்ச்’ படத்தின் தமிழ் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 21, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

கதை சுருக்கம் : போரின்போது தனது குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின் வீடு திரும்பும் “மரணத்தை ஏற்க மறுக்கும் மனிதன்” (ஜோர்மா டோமிலா), அந்த வீட்டை இடித்து ஒரு லாரியில் ஏற்றி, தனது குடும்பத்தின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தை கொன்ற சிவப்பு படை தளபதி (ஸ்டீபன் லாங் – Don’t Breathe புகழ்) மீண்டும் வந்து பழிவாங்க முயல்கிறார். இப்போது தொடங்குகிறது, உயிர்க்கும் மரணத்துக்கும் இடையிலான பரபரப்பான, அதிரடி நிறைந்த, நம்பமுடியாத சண்டைக் காட்சிகளால் நிரம்பிய சாகசப் பயணம்.

இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஜல்மாரி ஹீலாண்டர். தயாரிப்பாளர்கள் மைக் குட்ரிட்ஜ் மற்றும் பெட்ரி ஜோகிரண்டா. இப்படத்தில் ஜோர்மா டோமிலா, ரிச்சர்ட் பிரேக், ஸ்டீபன் லாங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this