HomeCinemaகே.பி.ஒய் பாலா கோலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்! -இயக்குநர் பாலாஜி சக்திவேல்

கே.பி.ஒய் பாலா கோலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்! -இயக்குநர் பாலாஜி சக்திவேல்

Published on

இயக்குநர் பாலாஜி சக்திவேல் தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார். எந்த படத்திலும் அவர் தோன்றுவது அந்த படத்துக்கே கூடுதல் நிறைவை வழங்கும் ‘லக்கி சார்ம்’ என்று பாராட்டப்படுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் மற்றும் டிஎன்ஏ படங்களில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் மேலும் ஒரு முறை ரசிகர்களின் இதயங்களை வெல்ல தயாராக இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார்.

படத்தைப் பற்றி பேசும்போது பாலாஜி சக்திவேல் பேசியபோது “நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்து வந்திருக்கிறேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெடுப்பதைப் பார்ப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. ஆனால், மறுபுறம் நிற்கும் நடிகராக இருப்பது சுலபமல்ல என்பதைக் கற்றுக் கொண்டேன். நான் இணைந்த ஒவ்வொரு திட்டமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக இருந்தது. அதுபோலவே காந்தி கண்ணாடியை ஷெரீஃப் விவரித்தவுடன் உடனே சம்மதித்தேன். மிகவும் அழகான, உணர்ச்சிமிகு திரைக்கதை அது. இறுதிப் படத்தைப் பார்த்தபோது அவர் எவ்வளவு நன்றாக உருவாக்கியிருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி.

இந்த படத்தில் கே.பி.ஒய் பாலா நிச்சயமாக கோலிவுட்டின் ‘கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்’ ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் திரை பகிர்ந்தது பெருமையாக இருந்தது. காந்தி கண்ணாடி பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

காந்தி கண்ணாடி திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஷெரீஃப். தயாரிப்பு ஆதிமூலம் க்ரியேஷன்ஸ் சார்பில் ஜெய்கிரண். படத்தில் கே.பி.வை பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயக, கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை – விவேக்–மெர்வின், ஒளிப்பதிவு – பாலாஜி கே.ராஜா, திருத்தம் – சிவானந்தீஸ்வரன்.

இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 5-ம் தேதி சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this