HomeCinemaரஜினி இயல்பாக இருப்பார்; கமல் அப்படி இருக்க மாட்டார்! -'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்தின் ஃபர்ஸ்ட்...

ரஜினி இயல்பாக இருப்பார்; கமல் அப்படி இருக்க மாட்டார்! -‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் கங்கை அமரன்

Published on

வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு போஸ்டரை வெளியிட்டார். இயக்குநர் அரவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். படத்தில் நடித்துள்ள பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி உள்ளிட்டோருடன் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய கங்கை அமரன், ”கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம், ஆனால் அவர் இப்போது எம்பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊமை விழிகள் படத்தின் பின்னணி இசையை பார்த்த பிறகுதான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். (என்று விழா மேடையிலேயே அரவிந்தராஜிடம் கூறினார்.)

ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்.

10 வருடங்கள் என்னை ஒதுக்கி வைத்திருந்தார் இளையராஜா. அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து அவரிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலகட்டத்தில் கல்லூரி விழாக்களில் பேசும்போதெல்லாம் பல இடங்களில் இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம், என் பாடலே காரணம் என்று வைரமுத்து கூறி வந்தார். இதைக் கேள்விப்பட்டு நான் அண்ணன் இளையராஜாவிடம் சொன்ன போதும், அவர் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக அதை அறிந்து கொண்ட பின்பு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் விரிசல் ஏற்பட்டது. இளையராஜாவுக்கும் வைரமுத்திற்கும் விரிசல் ஏற்பட காரணமே, ‘இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வைரமுத்து வெளி மேடைகளில் பேசியது தான்” என்றார்.

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ், சண்டை பயிற்சியாளர் கோல்டன் கோபால், இணை இயக்குனர் ஜெயக்குமார், எடிட்டர் புவனேஷ், டான்ஸ் மாஸ்டர் டயானா, பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் கங்கை அமரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்றார் இயக்குநர் வீர அன்பரசு.

Latest articles

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும்...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

இயக்குநர் டூ நடிகர்… நடிகர் டூ ஹீரோ… ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் புதிய  அவதாரம் எடுத்துள்ள பாலாஜி சக்திவேல்!

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்! இயக்குநராக...

More like this

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக மனிதர்களிடம் சாதிப் பாகுபாடு பார்த்துப் பழகுபவர். அவரை மிஞ்சும்...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...