HomeCinemaகனடாவில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழர் ஆர் ஜே சாய் ஒரே நேரத்தில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும்...

கனடாவில் வெற்றிக்கொடி நாட்டிய தமிழர் ஆர் ஜே சாய் ஒரே நேரத்தில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்!

Published on

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ்த் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார்.

ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன. ‘பிரெய்ன்’ திரைப்படத்தை ‘தாதா 87’, ‘பவுடர் ‘, மற்றும் ‘ஹரா’ புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, ‘ஷாம் தூம்’ படத்தை நவீன் குமார் இயக்குகிறார். ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய ஆர் ஜே சாய், “கனடாவில் வாழ்ந்து வரும் போதிலும் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். எனவே, ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ படங்கள் வாயிலாக எனது பயணத்தை தொடங்குகிறேன். உலகத் தரத்தில் இப்படங்கள் உருவாகவுள்ளன. கதையம்சம் மிக்க படங்களையும், திறமை கொண்ட இளைஞர்களையும் ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் தொடர்ந்து ஊக்குவிக்கும். எனது பிறந்த நாளன்று பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் வாழ்த்துகளோடு இந்த அறிவிப்பை வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

ஆர் ஜே சாய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் தொடங்கி 2026ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன. பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படங்களில் பணியாற்ற உள்ளனர். மற்ற விவரங்கள் விரைவில்…

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this