HomeCinemaரியல் ஸ்டார் உபேந்திராவின் பான் இந்தியா திரைப்படம் 'நெக்ஸ்ட் லெவல்' பிரமாண்டமாக துவங்கவுள்ளது!

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பான் இந்தியா திரைப்படம் ‘நெக்ஸ்ட் லெவல்’ பிரமாண்டமாக துவங்கவுள்ளது!

Published on

ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்.

சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் மகள் ஆராதனா நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் உடன் கடேரா படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார்.

தருண் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் இயக்குகிறார்.கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல டாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மிக முக்கிய VFX காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன் இணைந்து உருவாக்கப்படவுள்ளது. குறுகிய காலத்திற்குள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பை வழங்கி, தேசிய அளவில் கன்னட சினிமாவுக்கு புதிய அளவுகோலை அமைப்பதே படக்குழுவின் இலக்காகும்.

‘ஏ’, ‘உபேந்திரா’ , ‘ரக்த கண்ணீரு’ போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாரமும் கதை சொல்லும் பாணியும்,நெக்ஸ்ட் லெவல் படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரோஸ், மாஸ் லீடர் (சிவராஜ்குமார் உடன்) Rose, Mass Leader (with Shivarajkumar) , விக்டரி 2, காகி, சூ மந்தர் போன்ற படங்களை தயாரித்த தருண் சிவப்பா , தனது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்குகிறார். சூ மந்தர் படத்தில் பணியாற்றிய அனூப் கட்டுகரன், இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

வலுவான தொழில் நுட்ப குழுவும், வாகை சூடிய நட்சத்திர பட்டியலும் கொண்ட நெக்ஸ்ட் லெவல், திரைப்படம் சமீப காலத்தில் உருவாகும் மிக தனித்துவமான கன்னட படங்களில் ஒன்றாக இருக்கும்.

Latest articles

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் ‘பரிபாடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

https://www.youtube.com/watch?v=cfHo9hBpas8 ‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய படமான ‘பரிபாடி’ படத்தின் ஃபர்ஸ்ட்...

உற்சாகமாக நடந்த யோகி பாபு நடித்துள்ள ‘சிங்காரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ்....

More like this