HomeCinema'மதராஸி' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

‘மதராஸி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

Published on

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.

துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

“மதராஸி” படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ”நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு “சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் “மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை. மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this