HomeCinemaஇந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

Published on

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவிருக்கிறது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் மாறன், “கதையை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளோம். நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் தயாரிப்பாளர் அமல்ராஜ் இருவருக்கும் நன்றி. இவர்களுடன் பயணித்தது எங்கள் பாக்கியம். படத்தின் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. த்ரில்லர் மட்டுமல்லாது செண்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக படம் இருக்கும். நம் வீட்டிலேயே பிளாக்மெயில் உள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் கதையாக படம் இருக்கும். உங்கள் ஆதரவு தேவை. நன்றி” என்றார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், “மாறன் திறமையான இயக்குநர். தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமல்ராஜ் சாருக்கு வாழ்த்துக்கள். நல்ல கதைகள் நிச்சயம் கவனம் பெறும். அதுபோல, ‘பிளாக்மெயில்’ படமும் பேசப்படும் என நம்புகிறேன். தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்ஸ்டாகிராமில் தேஜூவுடன் நடனம் ஆடியிருந்தேன். வைரல் ஆனது. அங்கிருந்துதான் இந்தப் படத்திற்கு தேஜூ கதாநாயகியாக தேர்வு ஆனார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை தேஜூ அஸ்வினி, “இந்தப் படம் வெகு சீக்கிரம் நடந்தது. ஜிவி சாருடன் ஒரு நிமிட வீடியோ செய்திருந்தேன். அங்கிருந்துதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. யங் டேலன்ட்ஸூக்கு இதுபோல தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் சாருக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “30 வருடங்களுக்கு முன்னால் ‘பிளாக்மெயில்’ என்ற இந்தி படம் பார்த்தேன். காதலன் வில்லனாக மாறும் கதை அது. அந்தப் படத்தின் ஈர்ப்பு இந்த ‘பிளாக்மெயில்’ படத்தில் பார்த்தேன்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மாறனுடன் பணிபுரியும் இரண்டாவது படம் இது. நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை நான் செய்திருக்கிறேன். ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படங்களில் அவரது நடிப்பு இதில் உச்சமாக இருக்கும். படத்திற்கு வில்லன் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். வில்லனை விட துரோகிகள் பயங்கரம். நம் கூட இருப்பவர்கள் துரோகி ஆகும்போது என்னவாகும் என்பதுதான் கதை. இந்த மாதிரியான கதைகள் அதிகம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. வசனம் இல்லாமல் இசை மூலமாக கதை சொல்ல வேண்டும் என்ற இந்த படம் எனக்கு திருப்தியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். எதாவது ஒரு வகையில் இந்தப் படம் உங்களுக்கு நெருடலையும் எச்சரிக்கையையும் கொடுக்கும்” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this