HomeCinemaசித்தூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது! -உசுரே படத்தின் டிரெய்லர்...

சித்தூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது! -உசுரே படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் டி ஜே அருணாச்சலம் 

Published on

டி ஜே அருணாச்சலம் நடிப்பில், நவீன் டி கோபால் இயக்கியுள்ள ‘உசுரே’ திரைப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, சுப்ரமணிய சிவா, லோகேஷ் அஜில்ஸ், வாலி, நடிகர் மிர்ச்சி சிவா, இசையமைப்பாளர் சி சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய டீஜே, ”அசுரனுக்குப் பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆரம்பித்த நாட்களை நினைத்து பார்க்கையில் ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு என்னை இந்த அளவுக்கு அழைத்து வந்தது இசை தான். சிறு வயது முதல் இருந்தே அவ்வளவாக யாரிடமும் பேசியது இல்லை இசையிடம் மட்டுமே பேசி வந்தேன்..என் உணர்வுகளை பாடல் வரிகள் மூலம் பாடி தயாரித்தும் வந்தேன் எனது 16 வயதினில்… முட்டு முட்டு பாடல் மூலமாக உலகத்திற்கு அறிமுகமானேன்.

எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாத ஒரு ஈழத் தமிழ் குடும்பத்திலிருந்து வந்த நான் டிஜே அருணாச்சலம்.. என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த என் குரு வெற்றிமாறன் அவர்களுக்கு என் முதல் வணக்கமும் நன்றியும்… ஒரு வேல் முருகனா இந்த உலகத்துக்கு ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தியதற்கு வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி.. அசுரன் என்ற ஒரு படத்தினால் எனக்கு நிறைய சந்தோஷமும், என் வாழ்க்கையும் மாறியது.. அந்த ஒரு படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் கதை சொன்ன அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி… என்மேல் நம்பிக்கை வைத்த அந்த இயக்குனரில் ஒருவரான நவீனுக்கு நன்றி.. சித்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்… அசுரன் படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை ஆன ரோல் இந்த படத்துல எனக்கு..

நான் சிம்புவின் ரசிகன்.. இப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு சிம்பு நடித்த கோவில் படம் தான் நினைவிற்கு வந்தது.. சக்திவேல் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து தான் இப்படத்தில் நடித்தேன்.. அருமையான கதையை கொடுத்த நவீனுக்கு நன்றி அடுத்தடுத்து நீங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக படங்களை இயக்க வேண்டும்.. 22 நாட்களில் முடித்த படம் அழகாக வந்திருக்கு… ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் தயாரிப்பாளர் மவுலி அவர்களுக்கு நன்றி” என்றார்.

கதாநாயகி ஜனனி, ”டைரக்டர் சார் என்ன கதையை சொன்னாரோ அந்த அளவிற்கு அழகா படமா எடுத்து இருக்காரு” என்றார்.

நடிகை மந்த்ரா, ”ரொம்ப நாளைக்கு அப்புறமா மறுபடியும் தமிழ்ல படம் பண்ணனும்னு ஒரு ஆசை.. அதற்கான நேரத்திற்காக காத்திருந்தபோது.. இயக்குனர் நவீனும் தயாரிப்பாளர் மவுலியும் இந்த கதையை சொல்லும்போது நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.. ஒரு இண்டிபெண்டன்ட் உமனா சேலஞ்ச் இருக்கிற கேரக்டரா நடிச்சிருக்கேன்” என்றார்.

ஆர் வி உதயகுமார், ”பத்தோட பதினொன்னா இந்தப் படம் இருக்கும்னு தான் நினைச்சுகிட்டு வந்தேன் ஆனால் இது நம்பர் ஒன் படம்” என்றார்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this