HomeMovie Reviewஓஹோ எந்தன் பேபி சினிமா விமர்சனம்

ஓஹோ எந்தன் பேபி சினிமா விமர்சனம்

Published on

நடிகர் ஒருவர், இயக்குநராகும் லட்சியத்தில் இருக்கிற ருத்ரா என்ற இளைஞரிடம் கதை கேட்கிறார். அவர் சொல்லும் கதைகளில் ஒன்று அவருடைய சொந்த கதை; காதல் கதை. அந்த கதையில் காதலி அவரை விட்டுப் பிரிகிறார். அதுவரை கதையை சொல்லி முடிக்கிறார்.

கதையை கேட்டுக் கொண்ட நடிகர், ருத்ரா பிரிந்த அந்த காதலியை சந்தித்து விட்டு வா. சந்தித்தபின் என்னவெல்லாம் நடக்கிறதோ அதையும் சேர்த்து கதையை விறுவிறுப்பாக்கலாம் என்கிறார்.

ருத்ரா பிரிந்த காதலியை சந்திக்க புறப்படுகிறார். அவர் காதலியை எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார்? சந்தித்தபின் என்னவெல்லாம் நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் கிடைக்கிற பதில்கள் சுவாரஸ்யம்.

ருத்ரா (விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர்) படம் இயக்கும் ஆர்வத்தில் இருப்பது, கதை சொல்லும்போது உணர்வுகளுடன் அதை வெளிப்படுத்துவது, சொல்கிற கதையில் அவரே கதாநாயகனாக நடிக்கும்போது காதல், மோதல், கோபம், பரிதாபம் என அத்தனை உணர்வுகளையும் பாஸ்மார்க் கொடுத்துப் பாராட்டும் விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகராக வருகிற விஷ்ணு விஷால் தம்பிக்கு திரையின் பெரும்பகுதியை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, கதை கேட்பதும் அதில் இது அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என கருத்துக்களைப் பகிர்வதுமாய் தனது கடமையை முடித்துக் கொள்கிறார்.

காதலியாக வருகிற மிதிலா பால்கர் விதவிதமான உணர்வுகளை பிரதிபலிப்பதில் இருக்கும் தேர்ச்சி படத்தின் பலம்.

இயக்குநராகவே வருகிற இயக்குநர் மிஷ்கின், கீதா கைலாசம், கருணாகரன், கஸ்தூரி என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பில் நேர்த்தி தெரிகிறது.

கோவா அதுஇதுவென உற்சாகம் புரளும் பகுதிகள் கதை நடக்கும் இடங்களாக இருக்க தன் ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு புத்துணர்ச்சி தந்திருக்கிறார் ஹரிஷ் கண்ணன்.

ஜென் மார்ட்டின் இசை கதையோட்டத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது.

காதல், மோதல், பிரிவு என இந்த தலைமுறை ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக்கொள்ளும் விஷயங்களை மையப்படுத்தி, உணர்வுபூர்வமான படைப்பாக்கி இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் (5 ஸ்டார் கிருஷ்ணா என அறியப்படுகிற) கிருஷ்ணகுமார் ராமகுமார்.

Rating 3.5 / 5 

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this