HomeMovie Review`ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்' விமர்சனம்

`ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’ விமர்சனம்

Published on

ஜுராசிக் பார்க் யூனிவர்ஸின் 7-வது பாகமாக உருவாகியிருக்கிறது `ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்.’

வழக்கமான மனிதர்களை வளைத்துப் பிடித்துக் கொல்லும் முரட்டு டைனோசர், ஒட்டகச்சிவிங்கி போல் நீளமான கழுத்துடைய சைவ உணவு எடுத்துக் கொள்ளும் டைனோசர் என பார்த்துப் பழகிய டைனோசர்களுடன் இந்த பாகத்தில் கடலுக்குள் வாழ்கிற பிரமாண்டமான டைனோசரை பார்க்க முடிகிறது.

அந்த மூன்று விதமான டைனோசர்களின் டி என் எ’விலிருந்து மனிதர்களை இதய நோயிலிருந்து மீட்பதற்கான மருந்து தயாரிக்க முடியும் என்பதால், அந்த டைனோசர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிப்பதற்காக கடல் வழியாக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று புறப்படுகிறது.

அதே கடலில் ஒரு குடும்பம் படகில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த படகை  கடலில் வாழும் டைனோசர் தாக்க, படகு கவிழ்கிறது. அதில் பயணித்த குடும்பத்தினரை ஆராய்ச்சியாளர்கள் குழு மீட்டெடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டு பயணத்தை தொடர்கிறார்கள்.

எல்லோருமாக சேர்ந்த பயணத்தில் ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்களின் ரத்த மாதிரிகளை சேகரிப்பதற்குள் படுகிற பாடும், சந்திக்கும் சவால்களும்தான் கதையோட்டம்…

மருந்து நிறுவன அதிபராக ரூபர்ட் ஃப்ரெண்ட், முன்னாள் ராணுவ அதிகாரியாக ஸ்கார்லட் ஜான்சன், ப்ழங்கால உயிர்கள் ஆராய்ச்சியாளராக ஜானாதன் பெய்லி, கப்பல் கேப்டனாக மஹர்ஷலா அலி என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள் கதைக்கேற்ற பதற்றமும் பயமும், எடுத்துக் கொண்ட வேலையில் காட்ட வேண்டிய அர்ப்பணிப்பையும் தங்கள் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். மற்றவர்களும் நேர்த்தியான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஆபத்தான இடங்கள், டைனோசர்களின் தாக்குதல், அதையெல்லாம் சமாளித்து தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்வதில் போராட்டங்களைச் சந்திக்கும் குழுவினர் என வழக்கமான சாகசப் பயண டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் மிரட்டலான, பிரமாண்டமான மேக்கிங் படத்தை ஆர்வமாக பார்க்க உதவுகிறது.

படம் உங்களுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டினாலும் உங்களின் குட்டிச் சுட்டீஸுக்கு டைனோசர்களை பார்ப்பது சலிப்பு தட்டாது. அதுவும் இந்த முறை கடல் பயணம், கடலுக்குள் டைனோசர் என கூடுதல் சுவாரஸ்யங்கள் அணிவகுக்கின்றன.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this