HomeCinemaஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட 'அக்யூஸ்ட்' படத்தின் பேருந்து சண்டைக்காட்சி வெளியாகி இணையத்தில் வைரல்! 

ஒரு கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘அக்யூஸ்ட்’ படத்தின் பேருந்து சண்டைக்காட்சி வெளியாகி இணையத்தில் வைரல்! 

Published on

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ள பேருந்து சண்டைக்காட்சி ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஆக்ஷன் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா வடிவமைத்த இந்த சண்டைக்காட்சி சுமார் 40 ஃபைட்டர்கள் மற்றும் துணை நடிகர்கள் பங்களிப்புடன் 12 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த சண்டைக்காட்சிகாக மட்டுமே ஒரு பேருந்தை விலைக்கு வாங்கியும் ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்தும் படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளனர். ரூ 1 கோடிக்கு மேல் இந்த சண்டைக்காட்சிகாக மட்டும் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் மற்றும் இந்த சண்டைக் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து பஸ்சை ஓட்டிய ஃபைட்டர் அம்புரோஸ் ஆகியோர் பாராட்டப்பட்டனர். இசை வெளியீட்டு விழாவில் ஃபைட்டர் ஒருவர் கௌரவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this