HomeCinemaஅழகான, ஆத்மார்த்தமான மெல்லிசையோடு பயணம் துவக்கம்... சையாரா படத்தில் தலைப்பு பாடல் வெளியானது!

அழகான, ஆத்மார்த்தமான மெல்லிசையோடு பயணம் துவக்கம்… சையாரா படத்தில் தலைப்பு பாடல் வெளியானது!

Published on

காலத்தால் அழியாத காதல் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சையாரா.’

இந்த படத்தின் டீசர் வெளியான பிறகு 2025ம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. அறிமுக நடிகர்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை உருவாக்குவதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இப்படத்திலிருந்து ‘சையாரா ‘ என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர் . மேலும், மோஹித் சூரி , இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் ‘எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள்’ இருப்பதாக கூறியுள்ளார் . இதற்காக அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மோஹித் பேசுகையில், “என்னைப் பற்றி ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் புத்தகங்களை படிக்கவும், புத்தகங்களை சேகரிக்கவும் விரும்புபவர்களைப் போலவே மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, சையாராவின் ஆல்பத்தில் எனது பாடல்கள், எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது. அவற்றை நான் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வருகிறேன்.

சையாராவிற்காக அழகான, ஆத்மார்த்தமான மெல்லிசைகளுடன் கூடிய மிகவும் புதிய ஆல்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அறிமுக நடிகர்களின் படத்திற்காக நான் புதிய காதல் ஆல்பத்தை தர விரும்புகிறேன். சயாராவின் இசை ஆல்பம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது .எனவே, இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. சயாராவின் தலைப்புப் பாடலை முதலில் வெளியிட்டு எங்கள் மார்க்கெட்டிங் விளம்பரத்தை தொடங்குகிறோம்.

சயாராவின் தலைப்புப் பாடல் மூலம் காஷ்மீரில் இருந்து பாலிவுட் வரை மிகவும் திறமையான இந்திய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களான ஃபஹீம் அப்துல்லா மற்றும் அர்சலான் நிஜாமி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறோம் . இந்த பாடலை தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். ஃபஹீம் & அர்சலனை சந்திக்க வைத்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். அழகான பாடல் வரிகளை மேஸ்ட்ரோ இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்.”

சையாரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே பாண்டேவை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர் , மேலும் அனீத் பட்டா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர்) கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. சையாராபடத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.

Latest articles

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா – ஜி கே எம் தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை!

‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026  விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத்...

More like this