HomeCinema குயின் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள காதி ஜூலை 11-ம் தேதி வெளியாகிறது!

 குயின் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள காதி ஜூலை 11-ம் தேதி வெளியாகிறது!

Published on

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான ‘காதி’ ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அனுஷ்கா இந்த படத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை  அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோ, திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது.

படத்தின் புதிய அப்டேட்டாக படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் மற்ற நடிகர்கள் ஒரு ஆற்றை கடந்து பயணிக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது, இது படத்தின் தீவிரமான மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

படம், மனித இயல்பின் இருண்ட கோணங்களை ஆராயும் ஒரு தீவிரமான பயணமாக இருக்கும். இதில் கதாப்பாத்திரங்கள் தங்கள் கடந்தகாலங்களை நேரில் எதிர்கொண்டு, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் மீட்பு தேடக்கூடிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். காதி ஒரு க்ரிப்பிங் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகிறது, கிரிஷ் அனுஷ்காவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் நாயகியாக வழங்கியுள்ளார்.

படத்தில் சிறப்பு மிக்க பிரபலமான தொழில்நுட்பக் குழு பணியாற்றியுள்ளது. மனோஜ் ரெட்டி கடாசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைக்கிறார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை வழங்க, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.

பான் இந்தியா பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம்  தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் கிரிஷ்  இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ்  பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this