HomeCinemaபாலிவுட் படங்களுக்கு இணையான கலகலப்பான காதல் கதை... சமீர் அலிகான் நடிப்பு இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகும்...

பாலிவுட் படங்களுக்கு இணையான கலகலப்பான காதல் கதை… சமீர் அலிகான் நடிப்பு இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு.’ 

Published on

‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ எனும் படத்தை தனது சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார்.

மான்சி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கலகலப்பான காதல் கதையாக, அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக, மிகவும் ஸ்டைலான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து நிறைவு பெற்றுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு ‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன, அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this