HomeCinemaநடிகர் ஹம்சவிர்தன் இனி லியோ ஹம்சவிர்தன்... பெயர் மாற்றத்துடன், கேரள மாடலிங் கலைஞரை திருமணம் செய்துகொண்டு...

நடிகர் ஹம்சவிர்தன் இனி லியோ ஹம்சவிர்தன்… பெயர் மாற்றத்துடன், கேரள மாடலிங் கலைஞரை திருமணம் செய்துகொண்டு உற்சாகம்!

Published on

‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

லியோ ஹம்சவிர்தன் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை சமீபத்தில் புதுச்சேரியில் மணந்தார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.

நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் மே மாதம் 18ம் தேதி திருமண வரவேற்பு விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துகளோடும் இந்த காதல் திருமணம் நடந்தேறியது.

நடிகர் லியோ ஹம்சவிர்தன் உடனான திருமணத்தை தொடர்ந்து நிமிஷா இனி நிமிஷா லியோ ஹம்சவிர்தன் என்று அழைக்கப்படுவார்.

இரண்டு புது படங்களில் நடிக்க லியோ ஹம்சவிர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படங்களின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஹம்சவிர்தனின் முதல் மனைவி சாந்தி ஹம்சவிர்தன் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்க்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து சோகத்தில் மூழ்கி இருந்த அவர் அதில் இருந்து மீண்டெழுந்து தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தற்போது துவங்கி உள்ளார். லியோ ஹம்சவிர்தன் மற்றும் அவரது மனைவி நிமிஷா லியோ ஹம்சவிர்தனுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Latest articles

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்!

தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

More like this