HomeCinemaராகவா லாரன்ஸ் _ லோகேஷ் கனகராஜ் _ பாக்யராஜ் கண்ணன் கூட்டணியின் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு...

ராகவா லாரன்ஸ் _ லோகேஷ் கனகராஜ் _ பாக்யராஜ் கண்ணன் கூட்டணியின் பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

Published on

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவது எளிதானது கிடையாது. அதற்கான சரியான திரைக்கதையும் அதை சரியாக படமாக்குவதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘LCU’ (Lokesh Cinematic Universe) என்ற புதிய சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். அதை சுற்றி சிறு செய்திகள் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த புதிய என்ட்ரிக்கான நேரம் இது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மே 12; 2025 இன்று சென்னையில் தொடங்கியது. நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் இந்தப்  கலந்து கொண்டனர்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்களும் நடிக்க உள்ளனர். இன்னும் மற்ற நடிகர்களைப் பற்றிய விவரங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விரைவில் வெளியாகும்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமியின் தி ரூட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார்.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளிலும் 120 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிட்டுள்ளது.

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஜாக்கி இந்த படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். அனல் அரசு சண்டைப் பயிற்சிகளை கவனிக்கிறார். இந்த மெகா பட்ஜெட் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிரடி பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரெமோ’, ‘சுல்தான்’ படப்புகழ் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதை எழுதி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this