HomeCinemaபோர் பதற்றத்தால் கஜானா பட வெளியீடு நிறுத்தம். மறு வெளியீட்டுத் தேதி விரைவில்...

போர் பதற்றத்தால் கஜானா பட வெளியீடு நிறுத்தம். மறு வெளியீட்டுத் தேதி விரைவில்…

Published on

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் உள்ளிட்டோர் நடித்த ‘கஜானா’ திரைப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக கடந்த மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அன்றே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் ”நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிமேஷன் காட்சிகள் நிறைந்த, சுவராஸ்யமான ஃபேண்டஸி படத்தை பார்த்தோம். நிச்சயம் இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்று பாராட்டினார்கள்.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் யுத்த மனநிலைக்கு மாறியுள்ளனர். இந்த போரின் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நம் அண்டை மாநிலங்களும், அம்மக்களும் பாகிஸ்தானின் தாக்குதலால் பாதிக்கப்படும் செய்திகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனால், மக்களிடம் தற்போது திரைப்படம் பார்க்கும் மனநிலை இல்லை என்பதாலும், அனைவரும் போர் பதற்றம் குறித்த செய்திகளை அறியவே விருப்பம் காட்டுவதால், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிக மிக குறைவாகவே உள்ளது.

எனவே, பல கோடி ரூபாய் செலவு செய்ததோடு, பல வருடங்களாக உழைத்து மிகச்சிறந்த வி.எப்.எக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கிய ‘கஜானா’ திரைப்படத்தை ஒரு சாதாரண வெளியீட்டாக அல்லாமல், பெரும்பாலான மக்கள் பார்த்து மகிழக்கூடிய மிகப்பெரிய வெற்றி படமாக்க வேண்டும், என்பதற்காக படக்குழு படத்தின் வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘கஜானா’ படத்தை இன்று மாலை காட்சியோடு நிறுத்த முடிவு செய்துள்ள படக்குழு, யுத்த பதற்றம் தணிந்த பிறகு வேறு ஒரு நல்ல தருணத்தில், படத்தைப் போலவே வெளியீட்டையும் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. மறுவெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this