HomeCinemaயமன் படத்தின் புதிய போஸ்டரில் பயமுறுத்தும் தோற்றத்தில் ஜகதீஷ்... எகிறுது எதிர்பார்ப்பு!

யமன் படத்தின் புதிய போஸ்டரில் பயமுறுத்தும் தோற்றத்தில் ஜகதீஷ்… எகிறுது எதிர்பார்ப்பு!

Published on

சமீபமாக புராண அடிப்படையிலான திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகின்றன. அந்த வரிசையில் இடம்பிடிக்கவிருக்கும் படமாக உருவாகியுள்ளது ‘யமன்.’

ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த துமையான திரைப்படத்தில் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குநராகவும் பணியாற்றுகிறார். ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷித’ எனும் சக்திவாய்ந்த வாசகம் படத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஜகதீஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ராவணி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த படத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு வெளியான தலைப்பு போஸ்டர்கள் மற்றும் தீபாவளி சிறப்பு பதிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் இந்த புதிய போஸ்டர் அதன் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

புதிய போஸ்டரில், யமன் என்ற மரண தெய்வமாக ஜகதீஷ் பயமுறுத்தும் வலிமையான தோற்றத்தில் தோன்றுகிறார். பின்னணியில் மகிஷாசுரனைப் போன்ற அரக்க வடிவம், யமனின் கையில் உள்ள கனமான சங்கிலிகள் போன்றவை பயமுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கியமான ஒரு காட்சியில், கதாநாயகி யமபாசத்தில் சிக்கியிருப்பதும், யமனின் அலங்காரத்தில் ஜகதீஷின் தோற்றம் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவது போன்று உள்ளது. இந்தக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளன.

விஷ்ணு ரெட்டி வங்கா ஒளிப்பதிவு செய்ய, பாவனி ராகேஷ் இசையமைத்துள்ளார். கே.சி.பி. ஹரி அட தொகுப்பாளராகவும், ஹரி அல்லாசானி மற்றும் ஜகதீஷ் ஆமாஞ்சி கதாசிரியர்களாகவும் உள்ளனர். திரைக்கதை சிவா குண்ட்ராபு எழுதியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் வெளியீட்டு தேதி தெரியவரும்.

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

More like this