HomeCinemaநானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல்...

நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை!

Published on

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ் ஆபிஸில் அதிரவைக்கும் வசூலைத் தந்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முதல் காட்சி திரையில் ஓடத் தொடங்கிய தருணத்திலிருந்தே ‘HIT: தி தேர்ட் கேஸ்’ ஒரு பிளாக்பஸ்டராக மாறியது. இப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை தகர்த்து, முதல் நாள் வசூல் சாதனைகளை முற்றிலும் புதிய முறையில் மாற்றி அமைத்துள்ளது. சாதாரணமாக திரில்லர் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது அரிது. ஆனால் சைலேஷ் கொலானு இயக்கிய இந்த படம், தொடக்க நாளில் ரூ.43 கோடிக்கு மேல் வசூலித்து, நானியின் இதுவரை இருந்த அதிகபட்ச ஓப்பனிங் வசூலான ‘தசரா’வின் ரூ.38 கோடிகளை கடந்துள்ளது.

இந்த அதிரடி வசூல் வெறும் இந்தியாவில் மட்டும் இல்லை. வட அமெரிக்காவிலும் இந்த படம் $1 மில்லியனை கடந்து பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி, நானி நடித்த படங்களில் மிக உயர்ந்த வசூலையும், ஒரே நாளில் இந்திய படங்களின் வசூலில் முதலிடத்தையும் பிடித்து, $1.18 மில்லியன் வசூலுடன் சாதனை படைத்துள்ளது.

முக்கியமான ரிலீஸ்கள் இல்லாத ஒரு மாதத்தில், ‘HIT 3’ தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்திய சினிமாவிற்கும் ஒரு புத்துயிர் ஊட்டும் படமாக மாறியுள்ளது. இது நானியின் முந்தைய ஹிட் படங்களைவிட மட்டுமல்லாமல், நேற்று வெளியாகிய அனைத்து இந்திய படங்களையும் பின்னுக்கு தள்ளி, மொழி எல்லைகளைக் கடந்து, தலைசிறந்த முதல் நாள் வசூலைப் பெற்றுள்ளது.

மேலும், வரும் வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையில், இப்படத்தின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this