HomeCinemaயாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ‘சைத்ரா' நவம்பர் 17-ல் ரிலீஸ்!

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ‘சைத்ரா’ நவம்பர் 17-ல் ரிலீஸ்!

Published on

யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக, பேயாக நடித்திருக்கும் படம் ‘சைத்ரா.’ படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பொட்டு, ‘கா’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய எம்.ஜெனித்குமார் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் கூடிய முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. ‘பீட்சா’, ‘டிமான்டி காலனி’ படங்களைப் போல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை உருவாக்கியுள்ளோம்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. படத்தின் காட்சிகள் முழுவதையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் கிணறு பகுதியில் படமாக்கினோம். படம் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘பிவிஆர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது” என்றார்.

படைப்பில் பங்களிப்பு:-
தயாரிப்பு – ‘மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ்’ கே. மனோகரன்
இணை தயாரிப்பு – டி. கண்ணன் வரதராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி
ஒளிப்பதிவு – சதீஷ் குமார்
இசை – பிரபாகரன் மெய்யப்பன்
பாடல் வரிகள் – மணிகண்டன், விஜய லட்சுமி
எடிட்டிங் – எலிஷா ( பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்தவர்)
மக்கள் தொடர்பு – மணவை புவன்

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

More like this