HomeCinemaஎடிட்டிங் வேலை வைக்காத படம் இது; இதை இந்திய திரைத்துறையில் முதல்முறையாக நான் செய்துள்ளேன்! -45...

எடிட்டிங் வேலை வைக்காத படம் இது; இதை இந்திய திரைத்துறையில் முதல்முறையாக நான் செய்துள்ளேன்! -45 கன்னடப் படத்தின் தமிழ் பதிப்புக்கான பிரஸ் மீட்டில் இயக்குநர் அர்ஜுன் ஜான்யா பெருமிதம்

Published on

கன்னட திரையுலகின் கன்னட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி என மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து மிரட்ட, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ’45.’

பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. முன்னதாக படத்தின் தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் அர்ஜுன் ஜன்யா, ”சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை பார்க்கிறேன், சென்னை வந்தாலே எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் நினைப்பு தான் ஞாபகம் வரும். அவர்களின் தீவிர ரசிகன் நான். என் படம் தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. இந்தக்கதையை ரெடி செய்தவுடன் சிவாண்ணாவிடம் சொன்னேன், நீயே இந்தப் படத்தை பண்ணு என அவர் தான் உற்சாகப்படுத்தினார். இந்தத் திரைப்படம் பொறுத்தவரை, படம் எடுக்கும் முன், ப்ரீ விஷுவலாக ரெடி செய்யலாம் என நினைத்தேன். ஸ்டோரி போர்ட் மாதிரி, கார்டூனில், முழுதாக 2 1/2 மணி நேரம் ரெடி செய்து, அதை எடிட் செய்து, சிஜி செய்து, மியூசிக் போட்டு, டிடிஎஸ் செய்து காட்டினேன்.

சிவாண்ணா சந்தோசப்பட்டார். இதில் என்ன வசதி என்றால், படமெடுக்கும் போது வேஸ்ட்டாக ஒரு ஃப்ரேம் கூட எடுக்க தேவையில்லை, எல்லாமே தயாராக இருந்தது. எடிட்டிங் கூட வேலை இல்லை. இதை இந்திய திரைத்துறையில் முதல்முறையாக நான் செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. உபேந்திரா சார் மிக உற்சாகமாக நடித்துத் தந்தார். ராஜ் பி ஷெட்டி அருமையான ரோல் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் இசையமைப்பாளர் தான் ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் இல்லை. இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் நன்றி” என்றார்.

சிவராஜ்குமார, ”சென்னை எப்போது வந்தாலும் எனக்குள் மகிழ்ச்சியாக இருக்கும். நான் பிறந்து, படிச்சு, வளர்ந்தது இங்கு தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் இருக்கிறது. நான் சென்னையில் இருந்த போது தான், எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை, ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட்.

நானும் சினிமாவுக்கு வந்தேன், நிறைய தோல்வி, நிறைய வெற்றி பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன், இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், எனக்கு கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன். நாங்கள் மூன்று பேரும் மிக அருமையாக நடித்துள்ளோம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது புதுமையான அனுபவமாக இருக்கும். ஒரு முழுமையான எண்டர்டெயினிங் படமாக இது இருக்கும்” என்றார்.

ரியல் ஸ்டார் உபேந்திரா, ”இயக்குநர் அர்ஜுன் மிகப்பெரிய இசையமைப்பாளர், இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவர் கதை சொன்ன போதே, அவ்வளவு பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பாக இதை இயக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினேன். தயாரிப்பாளர் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி அருமையாக நடித்துள்ளார். டார்லிங் சிவாண்ணாவுடன், நானும் ஒரு கதாப்பாத்திரம் நடித்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் எம் ரமேஷ் ரெட்டி, ”இது பான் இந்தியா படமில்லை. இது இந்தியப்படம். இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெரிய பட்ஜெட்டில், சிஜி எல்லாம் செய்து, மிகப்பெரிய உழைப்பைத் தந்து உருவாக்கியுள்ளோம். இது டப் படம் இல்லை, இந்தியப்படம். சிவாண்ணா, உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். படம் அட்டகாசமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

 

 

Latest articles

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...

ராக்ஸ்டார் DSP vs தேவி ஸ்ரீ பிரசாத்… சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏப்ரல் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ அதிரடி ஆரம்பம்!

https://www.youtube.com/watch?v=2bwUK-NvtSI   ராக்ஸ்டார் DSP-யின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா - சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சி அவரது துள்ளல்...

More like this

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, பிரபல பாடகி சாருலதா மணி எழுதி இசையமைத்த ‘தென்றலில்’  சுயாதீன பாடல்!

https://www.youtube.com/watch?v=w1kKo7v-z6k இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து உருவான 'தக் லைஃப்' திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற...

டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை’ மே 1 முதல் Amazon Prime Video தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!

1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று...