HomeCinemaதமிழ்நாடு காவல்துறைக்காக 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய லியோ ஜூட் இயக்கிய 'டைமுக்கு சாப்பிடு பை...

தமிழ்நாடு காவல்துறைக்காக 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை உருவாக்கிய லியோ ஜூட் இயக்கிய ‘டைமுக்கு சாப்பிடு பை பாத்திமா’ குறும்படம் வெளியீட்டு விழாவில் ஏ டி ஜி பி அமல்ராஜ் ஐ பி எஸ் பங்கேற்பு!

Published on

தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் நடந்த விழாவில், லியோ ஜூட் S/O உபகார மேரி இயக்கிய ‘டைமுக்கு சாப்பிடு பை பாத்திமா’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.

குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். இந்த படத்தில் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அழகான திரைக்கதையில் நெஞ்சை நெகிழ வைக்க வைக்கும் காட்சிகளைக் கோர்த்துள்ளனர். கூடவே மெசேஜும் இருக்கிறது.

இந்த படத்தில் நவீன், ஜெயந்தி, சுதா, அனு ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் ஏடிஜிபி அமல்ராஜ் ஐபிஎஸ் கலந்துகொண்டு படத்தை இயக்கியவருக்கும் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.

அப்போது பேசிய அவர் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு போலீசாரும் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்த குறும்படத்தின் இயக்குநர் லியோ ஜூட் 20 ஆண்டுகளுக்கு மேலாக க்ரைம் மற்றும் அரசியல் பத்திரிகையாளராக என்.டி.டி.வி முதல் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் தலைமை செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.

திரைத்துறை மீதுள்ள ஆசையால் பணியைத் துறந்து ‘ப்ளூ பிக்ஸ் நியூஸ்’ என்ற நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த மாபெரும் சாதனையை டாக்குமென்ட்ரி படமாக எடுத்தபோது, அதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு பாராட்டு தெரிவித்தார்.

10க்கும் மேற்பட்ட குறும்படங்களை தமிழ்நாடு காவல்துறைக்கு இந்த நிறுவனம் எடுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this