HomeMovie Reviewசெருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸ் விமர்சனம்

செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸ் விமர்சனம்

Published on

வைரம் கடத்துகிற கதை, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைக்கதை… காம்போ பேக்கேஜாக ‘செருப்புகள் ஜாக்கிரதை.’

சிங்கம் புலியிடம் கடத்தல் வைரம் பதுக்கப்பட்ட செருப்பு வந்து சேர்கிறது. அதை வைத்து சொகுசாக வாழலாம் என நினைக்கிறார்கள். ஆனால், வைர செருப்பு ஒரு குடிகாரன் கைக்கு போய், அவனிடமிருந்து கைமாறி கவுன்சிலர் ஒருவர் வீட்டுக்கு போய்ச் சேர்கிறது. அவரை தேடி போனால் அந்த மனிதர் இறந்துபோய் சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடக்கிறது.

அந்த இடத்துக்கு போய்ச் சேர்கிற சிங்கம்புலியின் மகன் விவேக் ராஜகோபால், செருப்பைத் தேடுகிறார். அது கண்ணில் சிக்குகிறது. அதை எடுத்துக் கொண்டு எஸ்கேப்’பாகலாம் என்று பார்த்தால் சில தடங்கல்கள்… கவுன்சிலரின் சடலத்தை எடுத்துவிட்டால், வைரம் கிடைக்கவே கிடைக்காது என்கிற நிலைமை உருவாகிறது.

சடலத்தை எடுக்கவிடாமல் தடுக்க என்ன செய்யலாம் என யோசிக்கிறார். யோசித்ததை செயல்படுத்துகிறார். அது பலன் கொடுத்ததா இல்லையா என்பது அடுத்தடுத்த காட்சிகளில்…

வைரக் கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பதை லேசாக தொட்டிருக்கிறது திரைக்கதை… இயகம் ராஜேஷ் சூசைராஜ்

வைரம் பதுக்கப்பட்ட செருப்பு சிங்கம்புலியிடம் வந்து சேர்ந்தபின் அவர் வீட்டில் போலீஸ் ரெய்டு நடக்கிறது. அப்போது தொடங்கும் காமெடி களேபரம், விவேக் ராஜகோபால் மரணம் நிகழ்ந்த வீட்டில் நுழைந்து இறந்தவரின் மகன் மகளுக்கிடையில்  மகன் சண்டை சச்சரவை உருவாக்கும்போது காமெடி திருவிழாவாக விரிகிறது.

விவேக் ராஜகோபால், அவருக்கு ஜோடியாக ஐரா அகர்வால், சிங்கம் புலி என அத்தனை கதாபாத்திரங்களும் கலகலப்பூட்டுகிற கடமையைச் சரியாக செய்திருக்க, பின்னணி இசையும் ஒளிப்பதிவும் கதையோட்டத்தின் உற்சாகத்தை பெருக்கியிருக்கின்றன.

அயலி, தலைமைச் செயலகம், செங்களம், ஐந்தாம் வேதம் என பிரமாண்டமான, ஐந்து மணி நேரம், ஆறு மணி நேரம் ஓடுகிற வெப்சீரிஸ்களை வெளியிட்டு வியக்க வைத்த ZEE5 தளமானது,

சினிமா போன்று இரண்டு மணி நேரம், இரண்டரை மணி நேரம் ஓடுகிற படைப்புகளை உருவாக்கி அதை சிறு சிறு எபிசோடுகளாக ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டு புதிய பயணத்தை துவக்குகிறது. அந்த வரிசையின் முதல் படைப்பாக ‘செருப்புகள் ஜாக்கிரதை’யை அப்லோடு செய்திருக்கிறது. அது நொடிக்கு நொடி சிரிப்பதற்கு உத்தரவாதம் தருகிறது.

Rating 3.5 / 5

Latest articles

கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து உருவான கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பு.

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் 'கோகினூர்.' படத்தின் கதை வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர்...

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=65mrBBZbSbo கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும்...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

More like this